Saturday, 22 September 2012

கடற்கரை காதல்


காலை பணியில் உன்னுடன் கைகோர்த்து பயணம்,
சிலருக்கு உடற்பயிற்ச்சி, சிலருக்கு சிரிக்கும் தெரபி - உன் மடியில் 
மதியம் காதலர்க்கு ஒரு அரவணைப்பு 
தெருக்களில் உள்ள சச்சின்களுக்கு நீயே சேப்பாக்கம் மைதானம்
சொந்தங்களும், நண்பர்களும் கூடி மகிழும் மாலைகள்;
அத்துடன் பல மயக்கங்களில் மிதக்கும் உன் இரவுகள் -
என்று நீ தரும் சுகங்களை எல்லாம் அனுபவிப்பவர் பலர்.

மக்கள் உனக்கு செய்யும் இம்ம்சைகளை தாங்கி;
 அத்திபூதாற்போல் அரசாங்கம் உன்னை சுத்தம் செய்யும்,
காவல் துறையும் உன்னை காக்கும் - நன்றியுடன் சகித்து கொண்ட -
நீ பல தேசங்களை , மொழிகளை தாண்டிய ஒரு 
அழகு ஓவியமாய் அபிநயங்கள் பிடிக்கும் நாட்டியம்.

தேவதையே உன்னை என்னை போல் அறிந்தவர்கள் யார்?
நான் சிரிக்க என் பின்னே ஓடி வருவாய் 
அழுகயிலோ அமைதியாய் என் சோகங்களை கேப்பாய் 
படிக்கும் பொது ஒரு துணை நீ 
 யோசிக்கும் தருணங்களில் ஒரு ஆசிரியையும் நீயே. 
தோழியாக, துணைவியாக, குழந்தையாகவும் 
என்றும் என்னை பிரியாமல் இருக்கும் 
உன்னையும் என்னையும் கட்டி போட்ட இந்த உணர்வே -

கடற்கரை(உடன்) காதல்


No comments:

Post a Comment