Sunday 12 August 2012

வாழ்க்கையின் மர்மம்


கேட்ட வரங்கள் காத்திருந்த தருணங்கள்
கொஞ்சம் கொஞ்சமாய் நம்மை மாற்ற - ஏமாற்ற .
நின்று ஒரு நொடி யோசித்த பின்பு 
அதன் அபத்தங்களை அறிகிறது மூளை,
ஒத்துகொள்ள மறுக்கிறது மனது .

நாட்கள் கடந்து மாதங்கள் உருண்டோடி
மனதிற்கு உண்மைகள் விளங்கும் தருணங்களில்,
எங்கோ ஒலிக்கும் ஒரு பாடல், யாரோ சொல்லும் ஒரு வார்த்தை,
மனதின் இறுக்கத்தை இன்னும் வலிமை ஆக்குகிற.
அனால் அதே ஒரு நொடி எதோ ஒன்று நடந்து ,
உண்மைகள், யதார்த்தத்தை தலை மேல் குட்டி
உரக்க சொல்லி செல்கிறது .

கானல் நீரை தண்ணீர் என்று நம்பி,  
வாழ்கை என்றும் படகை ஒட்டி சென்று...
படகை கவிழ்க்க செய்வது .. யாருடைய குற்றமோ?
என்றோ ஒருநாள் காயம் ஆறலாம்
அனால் தழும்பு மறையுமோ?

மும்முரமாக  கனவில் கோட்டைகளை கட்டும்போது
வழி மாறி வேறொன்று நடந்து முடிந்து 
நமக்கு கண்ணாமூச்சி ஆட்டம்  காட்டி செல்வதே 
வாழ்க்கை எனும்  மர்மம்.

No comments:

Post a Comment