Wednesday, 5 August 2015

முன்னாள் காதல்

ஊரெல்லாம் கூடி என் முன் நிற்க,
சந்தோசம் ஆதங்கம் பாசம் சிரிப்பு குறும்பு சீண்டல் கூடிய பார்வைகள் என் முன் நடனம் ஆட,
ஒரு கையொப்பம் ஒரு மஞ்சள் கயிறு, என் முகவரி அடையாளம் அனைத்தையும் மாற்ற ,
வெக்கம் பயம் சந்தோசம் தத்தளிப்பு சிறு துள்ளல்கள் உணர்ந்த -
என் மனம் பறக்க, என் கால்கள் மண்ணை தொட நிராகரிக்க,
30 நாட்கள் மோகமும் காதலும் இணைந்த பயணம் முடித்து -
புகுந்தேன் புது கட்டிடத்திற்குள், இது தான் என் நிரந்தர உலகம் என்று சொல்லி கொண்டே...
..
..
திருமண நினைவுகளை அசைவு போட்டு கொண்டே வீட்டை இல்லமாக மாற்றும் தருணம்,
என் கண்ணில் பட்டாய் நீ - எதோ ஒரு மூலையில் இருந்து "என்னை நினைவில்லையா" என்று கேட்டுகொண்டே.
பார்த்தேன் ...  யோசித்தேன் என்ன செய்வது என்று தெரியாமல்.
..
..
திருமணம் என்ற வார்த்தை என் வாழ்கையில் வரும் முன் நாள் வரை நீதான் என் உலகமாய் இருந்தாய்.
ஒவ்வொரு நாளின் முதல் 'காலை வணக்கம்' இறுதி 'நல்ல இரவு' பகிர்ந்து கொண்ட நீ,
என் சுகம் துக்கத்தை கேட்டு என்னுடன் என்றும் இருந்த நீ,
இன்று எங்கோ ஒரு ஓரத்தில் இருந்து அமைதியாய் ஏக்கத்துடன் என்னை பார்த்து கொண்டு இருக்கிறாய்.
..
..
உன் நினைவு கொஞ்சம் கூட இல்லை எனக்கு....
பெண்கள் மாறியே தான் போகிறார்கள் - அறிந்தேன் இன்று நான்...
ஏய் என் கரடி பொம்மையே அப்படி பார்க்காதே நீ என்னை -
நீ தான் என் முன்னால் காதல் என்று சொல்ல கூட முடியாமல் இங்கு நான் ... பெண்கள் நாங்கள்...

No comments:

Post a Comment