மௌனத்தின் விளக்கம் நான்,
இன்று எழுத்தால் சொல்ல துடிக்கிறேன் என் இதயத்தின் பிரசங்கத்தை -
ஒருவனின் ‘கண் இமைகளின் நடனம், பார்வைகளின் கவிதை, கரு விழிகளின் பேச்சு’,
இதை தினம் கண்டு உயிர்த்தெழுகிறேன் வாழ்வின் அர்த்தம் புரிந்து.
..
..
மனதின் வார்த்தைகளை நடித்து காட்டியே வளர்ந்தவள் நான்,
வர்ணனை, வலி, உணர்ச்சிகள் - அனைத்தையும் முகத்தில் காட்டியே வாழ்பவள் நான்,
என் குறையை எண்ணி குமுறிய நாட்கள் எல்லாம் வீண் என்று நினைக்க வைத்தது -
இவன் புன்னகையும் பார்வையும் என் பக்கம் நின்று உணர்த்திகொண்டிருக்கும் பாசமும்.
..
..
“மௌனம் காப்பவள் வாழ்கை துணையாக இருக்க தகுதி அற்றவள்”
என்று அன்று சொல்லி பிரிந்தவனின் செயலால் சாம்பலாகி இருந்த என்னை,
இன்று இவன் என் பக்கம் வந்து வார்த்தைகளை துறந்து கை மொழியால் பேசி கை கோர்த்து நடந்து
படங்களில் காட்டும் உணர்சிகளை என் மனதிலும் முகத்திலும் காட்ட வைப்பதை..... கண்டு வியந்தேன்..
..
..
தாய், தந்தை,ஆசான், நண்பன், காதலன், கணவன் என்று அனைத்துமாய் இவன் என்னோடு வாழ
நன்றி சொல்கிறேன் இன்று இருவருக்கும்,
என்றோ உணர்ந்த நிராகரிப்பின் சுட்டெரிப்பு இன்று தணிந்து முத்தங்களாய் மாறிப்போக ..
No comments:
Post a Comment