எப்பொழுதும் உன் பக்கங்களை சிறையில் வைக்கிறாய்
கதைகளை காவியங்களை உன்னுடனே வைத்து கொள்கிறாய்
என்னுடைய நேரங்களை தின்றுவிட்டு
நீயே சிறந்தவள் என்று அனைவரிடமும் என்னை சொல்ல
வைக்கிறாய்
உன்னை பிரியும் பொழுது சுகம், தூக்கம், சிலிர்ப்பு,
வலி, ஆதங்கம், கோவம்
- ஏதாவது ஒன்றை தந்து விடுகிறாய்
உன்னை வெறுக்க இயலவில்லை
பிரியவும் பிடிக்கவில்லை
கல் நெஞ்சமடி உனக்கு என்று சொல்ல கூட மனம் இல்லை
ஏன் என்றால்
கற்று தருகிறாய் உலகத்தை எனக்கு நீ தான் அடி
No comments:
Post a Comment